• Sep 20 2024

மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு; 9ம் திகதிக்கு முன் தேர்தல் திகதி அறிவிப்பு! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 9:55 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், இன்று (மார்ச்.04) கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் கூடி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் நேற்று (மார்ச்.03) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு; 9ம் திகதிக்கு முன் தேர்தல் திகதி அறிவிப்பு SamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 7ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.அன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.இது தொடர்பில், இன்று (மார்ச்.04) கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் மீண்டும் கூடி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் நேற்று (மார்ச்.03) இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இதன்படி, நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement