• Nov 28 2024

எரிவாயு பற்றி தணிக்கை அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

Tamil nila / Jan 14th 2024, 8:15 pm
image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

குறைந்த விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும், அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான புதிய கொள்வனவு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவை கொள்வனவு செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பில்லியன் டாலர்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 120 மில்லியன் டாலர் மானியம் பயன்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிவாயு பற்றி தணிக்கை அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு. தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின்படி, அதிக விலைக்கு திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது.லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெற்றோலிய எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.குறைந்த விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும், அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான புதிய கொள்வனவு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன்படி, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவை கொள்வனவு செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பில்லியன் டாலர்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 120 மில்லியன் டாலர் மானியம் பயன்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement