• Dec 06 2024

பாரம்பரிய முறைப்படி ருசியான சர்க்கரை பொங்கல் செய்முறை…!

Tamil nila / Jan 14th 2024, 8:03 pm
image

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டு அறுவடையை மக்கள் தொடங்குவர். பொங்கல் திருநாளன்று அனைவரது வீட்டிலும் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வர். சர்க்கரைப் பொங்கல் செய்முறை குறித்து இங்கு காணலாம்.

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

1. அரிசி – 1 கப்

2. பாசிப்பயறு – 1/4 கப்

3.பால் – 4 கப்

4.வெல்லம் – 1 கப்

5.முந்திரி – 3 தேக்கரண்டி

6.உலர்திராட்சை – 3 தேக்கரண்டி

7.ஏலக்காய் – 5

8.நெய் – 1/4 கப்

9.தேங்காய் – 1/2 கப்

ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சர்க்கரை பொங்கல் செய்முறை:

1.முதலில் ஊறவைத்த அரிசியுடன், பாசிப் பயறு சேர்த்து பாலில் வேகவைக்க வேண்டும்.

2. நெய், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளற வேண்டும்.

3.பின்னர், மற்றொரு வானலியில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, வேகவைத்த அரிசிக் கலவையுடன் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான சர்க்கரை பொங்கல்  தயாராகி உண்டு மகிழலாம்.

பாரம்பரிய முறைப்படி ருசியான சர்க்கரை பொங்கல் செய்முறை… தைத்திருநாளான பொங்கல் பண்டிகையன்று அதிகாலையில் எழுந்து பொங்கல் படையலிட்டு சாமி கும்பிட்டு அறுவடையை மக்கள் தொடங்குவர். பொங்கல் திருநாளன்று அனைவரது வீட்டிலும் கட்டாயம் சர்க்கரைப் பொங்கல் செய்வர். சர்க்கரைப் பொங்கல் செய்முறை குறித்து இங்கு காணலாம்.சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:1. அரிசி – 1 கப்2. பாசிப்பயறு – 1/4 கப்3.பால் – 4 கப்4.வெல்லம் – 1 கப்5.முந்திரி – 3 தேக்கரண்டி6.உலர்திராட்சை – 3 தேக்கரண்டி7.ஏலக்காய் – 58.நெய் – 1/4 கப்9.தேங்காய் – 1/2 கப்ஆகியவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.சர்க்கரை பொங்கல் செய்முறை:1.முதலில் ஊறவைத்த அரிசியுடன், பாசிப் பயறு சேர்த்து பாலில் வேகவைக்க வேண்டும்.2. நெய், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளற வேண்டும்.3.பின்னர், மற்றொரு வானலியில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, வேகவைத்த அரிசிக் கலவையுடன் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சூடான சுவையான சர்க்கரை பொங்கல்  தயாராகி உண்டு மகிழலாம்.

Advertisement

Advertisement

Advertisement