• Nov 28 2024

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு...!

Chithra / Feb 1st 2024, 1:08 pm
image

 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய அதில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான நிபந்தனைகள் கடுமையாக காணப்பட்டமையினால் கொடுப்பனவுகளை பெறாத பயனாளர்கள் இந்த முறை விண்ணப்பிக்க முடியும் என்றும்  நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 1,700,000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.  அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ருவன்வெல்ல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளர்களை தெரிவு செய்வதில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய அதில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன், கடந்த காலங்களில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான நிபந்தனைகள் கடுமையாக காணப்பட்டமையினால் கொடுப்பனவுகளை பெறாத பயனாளர்கள் இந்த முறை விண்ணப்பிக்க முடியும் என்றும்  நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 1,700,000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement