மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, இலங்கை மின்சார சபையானது கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை அண்மையில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கலந்துரையாடப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் கூட்டுத் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
அதன்படி, ஆணைக்குழு மூலம் மேலதிக திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், மின் சபை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.
இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு. மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக தகவல்களை கோரி இலங்கை மின்சார சபைக்கு இன்று (28) அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, இலங்கை மின்சார சபையானது கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை அண்மையில் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கலந்துரையாடப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் கூட்டுத் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.அதன்படி, ஆணைக்குழு மூலம் மேலதிக திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், மின் சபை கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது.இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில், டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.