வவுனியா வடக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக இன்று வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.
இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத் தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளைக் கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
கிவுல் ஓயா குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் - எம்.பிக்கள் வெலிஓயாவுக்கு அழைப்பு வவுனியா வடக்கை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக இன்று வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும், எதிர்த் தரப்பு எம்.பிக்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலின்போது கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக விளக்கக் காட்சிகள் அடங்கிய தெளிவுபடுத்தல்களை முன்னெடுக்கவுள்ளது.இதேவேளை, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள கிவுல் ஓயா திட்டம் சம்பந்தமாக வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக அதிகாரிகளும், கரைத்துரைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளும் மிகத் தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறிப்பாக, கடந்த 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து, கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதால் காணப்படுகின்ற பிரச்சினைகளைக் கண்டறியும் முகமாகவே குறித்த கள ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.