• Oct 06 2024

ரணில் மற்றும் மகிந்தவுக்கு இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு..!

Chithra / Apr 16th 2024, 7:40 am
image

Advertisement


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச உட்பட அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறும் மொட்டுக் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மொட்டுக் கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்கஉள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதுடன்மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் குறித்த மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

ரணில் மற்றும் மகிந்தவுக்கு இடையில் விரைவில் முக்கிய சந்திப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச உட்பட அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறும் மொட்டுக் கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மொட்டுக் கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றது.இந்த நிலையில், ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்கஉள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதுடன்மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது.இதன்போது ஜனாதிபதித் தேர்தல் குறித்த மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement