• Sep 23 2024

Sharmi / Sep 25th 2023, 10:12 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் இந்த அமைச்சரவை கூட்டமானது இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐ.நாவின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்தமையினால் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் போது, இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முக்கிய கூட்டம்.samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான இரண்டாம் தவணைக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகி வருகின்றது.இந்நிலையில் இந்த அமைச்சரவை கூட்டமானது இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.ஐ.நாவின் பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்தமையினால் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.இந்நிலையில் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் போது, இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கமளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement