• Nov 14 2024

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

Chithra / Aug 16th 2024, 8:51 am
image

 

அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.

அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள்  ஒக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும்,

ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய அறிவுறுத்தலை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி  வழங்கியுள்ளார்.

மேலும், புதிய குடிவரவு சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவிறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்  அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள்  ஒக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கோருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும்,ஒக்டோபர் மாத இறுதிக்குள் 50 இலட்சம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய அறிவுறுத்தலை துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி  வழங்கியுள்ளார்.மேலும், புதிய குடிவரவு சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவிறுத்தல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement