• Sep 20 2024

சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்! samugammedia

Tamil nila / Jul 2nd 2023, 9:34 pm
image

Advertisement

கடுவெல சங்கபிட்டி புராதன விகாரையின் வருடாந்த பெரஹெர திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

பெரஹெர திருவிழாவின் இறுதி ஊர்வலம் இன்று (02) இரவு 8 மணி முதல் நாளை (03) அதிகாலை 3 மணி வரை நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சங்கபிட்டி புராதன விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹெர புதிய கண்டி வீதியின் ஊடாக (பாதை 177) மாலம்பே நோக்கிச் சென்று கொத்தலாவல தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலை வந்தடைந்து, பின்னர் ராஜசிங்க மாவத்தை வழியாக கொழும்பு-அவிசாவளை பிரதான வீதியை (பாதை 143) வந்து, ஹேவாகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடுவெல சந்தியை அடைந்து, வலதுபுறமாக மாலம்பே நோக்கி திரும்பி பின்னர் விகாரைக்கு பயணிக்கவுள்ளது.  

மேலும் பெரஹெர நடைபெறும் காலப்பகுதியில் மேல் குறிப்பிட்ட வீதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் samugammedia கடுவெல சங்கபிட்டி புராதன விகாரையின் வருடாந்த பெரஹெர திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரஹெர திருவிழாவின் இறுதி ஊர்வலம் இன்று (02) இரவு 8 மணி முதல் நாளை (03) அதிகாலை 3 மணி வரை நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சங்கபிட்டி புராதன விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹெர புதிய கண்டி வீதியின் ஊடாக (பாதை 177) மாலம்பே நோக்கிச் சென்று கொத்தலாவல தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலை வந்தடைந்து, பின்னர் ராஜசிங்க மாவத்தை வழியாக கொழும்பு-அவிசாவளை பிரதான வீதியை (பாதை 143) வந்து, ஹேவாகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடுவெல சந்தியை அடைந்து, வலதுபுறமாக மாலம்பே நோக்கி திரும்பி பின்னர் விகாரைக்கு பயணிக்கவுள்ளது.  மேலும் பெரஹெர நடைபெறும் காலப்பகுதியில் மேல் குறிப்பிட்ட வீதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement