தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நீர்ப் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து அகற்றப்பட்ட பழைய நீர் குழாயின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் நீர் பாவனையாளர்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறான நீர் குழாய் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அது தாய்லாந்தில் உள்ள பழைய நீர்க் குழாய் எனவும் தெரியவந்துள்ளதாகவும் அந்தச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலட்டுவவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீர் விநியோகக் குழாய் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னணியில் இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால், நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் சுத்தமான நீர் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் முக்கிய அறிவிப்பு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நீர்ப் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தாய்லாந்தில் இருந்து அகற்றப்பட்ட பழைய நீர் குழாயின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் நீர் பாவனையாளர்களை சிலர் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.அவ்வாறான நீர் குழாய் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் அது தாய்லாந்தில் உள்ள பழைய நீர்க் குழாய் எனவும் தெரியவந்துள்ளதாகவும் அந்தச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கலட்டுவவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வரும் நீர் விநியோகக் குழாய் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னணியில் இது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சபை குறிப்பிட்டுள்ளது.மேலும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால், நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் சுத்தமான நீர் தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.