• Apr 03 2025

யாழ் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டம்!

Tamil nila / Jun 20th 2024, 7:39 pm
image

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை இன்று  ஆரம்பித்துள்ளனர்.

சம்பள நிலுவை மற்றும் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி 49 ஆவது நாளாக அகில இலங்கை ரீதியாக அனைத்து பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

இந் நிலையில் நேற்றுமுதல்  ஏனைய பல்கலைக் கழகங்களில் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் தங்கராஜா  தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.



யாழ் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி ஊழியர்கள் சத்தியாகிரக போராட்டம் யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்கலைக்கழக பிரதான வாயிலை மூடி சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை இன்று  ஆரம்பித்துள்ளனர்.சம்பள நிலுவை மற்றும் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி 49 ஆவது நாளாக அகில இலங்கை ரீதியாக அனைத்து பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறதுஇந் நிலையில் நேற்றுமுதல்  ஏனைய பல்கலைக் கழகங்களில் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் தங்கராஜா  தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement