• Jan 21 2025

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி முக்கிய உத்தரவு...!

Sharmi / Feb 6th 2024, 8:38 am
image

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளையதினம்(07) ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சிம்மாசன உரையை ஆற்றவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும், நேர்த்தியாகவும் நாடாளுமன்ற அமர்வுகளை மேற்கொள்ள நாடாளுமன்றத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் அன்றைய அமர்வின் போது மரியாதை அணிவகுப்பு, துப்பாக்கி வேட்டுகள், பாதுகாப்பு தொடரணி, பாதுகாப்பு பணியாளர்கள் வரிசையில் நிற்பது போன்ற எந்த அம்சங்களும் தவிர்க்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் ஜனாதிபதி முக்கிய உத்தரவு. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நாளையதினம்(07) ஆரம்பமாகவுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது சிம்மாசன உரையை ஆற்றவுள்ளார்.இந்நிலையில் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும், நேர்த்தியாகவும் நாடாளுமன்ற அமர்வுகளை மேற்கொள்ள நாடாளுமன்றத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.மேலும் அன்றைய அமர்வின் போது மரியாதை அணிவகுப்பு, துப்பாக்கி வேட்டுகள், பாதுகாப்பு தொடரணி, பாதுகாப்பு பணியாளர்கள் வரிசையில் நிற்பது போன்ற எந்த அம்சங்களும் தவிர்க்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement