• May 19 2024

கெஹெலிய வழக்கில் திடீர் திருப்பம்- மருந்து கொள்வனவு மோசடியின் பிரதான சூத்திரதாரி பசில்? samugammedia

Sharmi / Feb 6th 2024, 8:33 am
image

Advertisement

இந்திய கடன் திட்டங்களின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்த மோசடியின் பிரதான சூத்திரதாரி பசில் ராஜபக்ச என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹெலிய தரப்பில் முன்னிலையகி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் முறையிட்டு;ள்ளார்.

அதாவது இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டது. 

அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவே அன்றி கெஹலிய ரம்புக்வெல்ல அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெலவை, அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக இருந்தபோது, அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவந்த போதிலும் அது தோற்கடிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கெஹலிய ரம்புக்வெலவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, அது ரமேஷ் பத்திரனவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்நது.

இருந்தபோதிலும், தற்போது, கெஹலிய ரம்புக்வெல, அமைச்சரவையில் சுற்றாடல் துறை அமைச்சராக நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கெஹெலிய வழக்கில் திடீர் திருப்பம்- மருந்து கொள்வனவு மோசடியின் பிரதான சூத்திரதாரி பசில் samugammedia இந்திய கடன் திட்டங்களின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்த மோசடியின் பிரதான சூத்திரதாரி பசில் ராஜபக்ச என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.அமைச்சர் கெஹெலிய தரப்பில் முன்னிலையகி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் முறையிட்டு;ள்ளார்.அதாவது இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டது. அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவே அன்றி கெஹலிய ரம்புக்வெல்ல அல்ல என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெலவை, அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.கெஹலிய ரம்புக்வெல சுகாதார அமைச்சராக இருந்தபோது, அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டுவந்த போதிலும் அது தோற்கடிக்கப்பட்டிருந்தது.ஆனால், கெஹலிய ரம்புக்வெலவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, அது ரமேஷ் பத்திரனவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்நது.இருந்தபோதிலும், தற்போது, கெஹலிய ரம்புக்வெல, அமைச்சரவையில் சுற்றாடல் துறை அமைச்சராக நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement