• Dec 05 2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பாக அனுதாபப் பிரேரணை நடத்த இம்ரான் எம்.பி கோரிக்கை..!!

Tamil nila / Feb 28th 2024, 9:11 pm
image

சில மாதங்களுக்கு முன்னர் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான  மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பான அனுதாபப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாப் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். எனினும், சில முன்னாள் உறுப்பினர்களுக்கான பிரேரணைகள் நீண்ட காலங்களுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தத் தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு நஜீப் ஏ மஜீத் தொடர்பான அனுதாப் பிரேரணையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பாக அனுதாபப் பிரேரணை நடத்த இம்ரான் எம்.பி கோரிக்கை. சில மாதங்களுக்கு முன்னர் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான  மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பான அனுதாபப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாப் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். எனினும், சில முன்னாள் உறுப்பினர்களுக்கான பிரேரணைகள் நீண்ட காலங்களுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்தத் தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு நஜீப் ஏ மஜீத் தொடர்பான அனுதாப் பிரேரணையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement