கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (10) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
கடந்த கால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், சிறுபோக பயிர்ச் செய்கை, துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக பயிர் செய்கையினை விரைவாக நிறைவுறுத்துவது தொடர்பிலும் எதிர்காலத்தில் இரணைமடுவின் கீழான சிறுபோகபயிர்ச்செய்கையினை முறையான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு கல்மடுக்குளம் குடமுருட்டி குளம் ஆகியவற்றின் சிறுபோக பயிர்செய்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், yuகிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் : பல்வேறு விடயங்கள் ஆராய்வு - அரசாங்க அதிபர் முரளிதரன் கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (10) நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.கடந்த கால கூட்ட அறிக்கை, நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், சிறுபோக பயிர்ச் செய்கை, துறைசார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.மேலும் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக பயிர் செய்கையினை விரைவாக நிறைவுறுத்துவது தொடர்பிலும் எதிர்காலத்தில் இரணைமடுவின் கீழான சிறுபோகபயிர்ச்செய்கையினை முறையான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவதற்கான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு கல்மடுக்குளம் குடமுருட்டி குளம் ஆகியவற்றின் சிறுபோக பயிர்செய்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், yuகிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், துறை சார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் விடயதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய சம்மேளனங்களின் அங்கத்தவர்கள், மாவட்ட விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.