• Nov 13 2024

மன்னாரில் இழுத்து மூடப்பட்ட வெதுப்பகங்கள்..!

Sharmi / Nov 8th 2024, 9:58 am
image

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக சுகாதார சீர்கேடுகளுடன் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவை பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம்(07) சீல் வைத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு 12 குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதும் குறித்த வெதுப்பகங்கள் அறிவிப்புக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நேற்றைய தினம் குறித்த வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சீல் வைக்கப்பட்ட இரண்டு வெதுப்பகங்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடுமாறும், பொது சுகாதார பரிசோதகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட 12 சுகாதார பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் வரை குறித்த வெதுப்பகங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதே போன்று மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வரும் உணவங்கள் தொடர்பிலும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



மன்னாரில் இழுத்து மூடப்பட்ட வெதுப்பகங்கள். மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக சுகாதார சீர்கேடுகளுடன் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இயங்கி வந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவை பெற்று மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்றையதினம்(07) சீல் வைத்துள்ளனர்.கடந்த பல மாதங்களாக மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகங்கள் தொடர்பில் பரிசோதிக்கப்பட்டு 12 குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட போதும் குறித்த வெதுப்பகங்கள் அறிவிப்புக்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நேற்றைய தினம் குறித்த வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சீல் வைக்கப்பட்ட இரண்டு வெதுப்பகங்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மூடுமாறும், பொது சுகாதார பரிசோதகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட 12 சுகாதார பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் வரை குறித்த வெதுப்பகங்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.இதே போன்று மன்னார் மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வரும் உணவங்கள் தொடர்பிலும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement