• Mar 06 2026

இலங்கையில் 2 வயதுக் குழந்தைக்கு எமனான பலாப்பழம்; மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு

Chithra / Feb 11th 2026, 7:38 pm
image


வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 


கேகாலை - அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது மற்றும் 11 மாதங்கள் உடைய குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 


குறித்த குழந்தை கடந்த 2ஆம் திகதி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கேகாலை - மொலகொட ஊடாக அத்தனகொட வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதுஇ மொலகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழத்தின் மீது மோட்டார் சைக்கிள் வழுக்கியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடம் சரிவான பகுதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தினால் கடும் மனவேதனைக்கு உள்ளான குழந்தையின் தந்தை, விஷம் அருந்திய நிலையில் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் 2 வயதுக் குழந்தைக்கு எமனான பலாப்பழம்; மனவேதனையில் தந்தை எடுத்த விபரீத முடிவு வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் வழுக்கி விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கேகாலை - அத்தனகொட, கரடுப்பனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது மற்றும் 11 மாதங்கள் உடைய குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை கடந்த 2ஆம் திகதி தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கேகாலை - மொலகொட ஊடாக அத்தனகொட வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போதுஇ மொலகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் விழுந்து கிடந்த பலாப்பழத்தின் மீது மோட்டார் சைக்கிள் வழுக்கியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடம் சரிவான பகுதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தினால் கடும் மனவேதனைக்கு உள்ளான குழந்தையின் தந்தை, விஷம் அருந்திய நிலையில் கேகாலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement