• Mar 10 2026

இலங்கையில் நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை

Chithra / Mar 10th 2026, 7:27 am
image


இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே  இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 


340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 


281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும். 


329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும். 


மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.


அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.


இந்த விலை மாற்றம்  நள்ளிரவுடன் நடைமுறையாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இது ஒரு சிறிய தியாகமே" என எரிபொருள் விலை உயர்வு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.


"ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். உலக அமைதிக்காக நாம் செய்யும் ஒரு சிறிய நிதித் தியாகம் இது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் முட்டாள்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான உடன்பாட்டின் 

அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் (Inflation) 

பாரியளவில் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா 

ஜோர்ஜிவா எச்சரித்துள்ளார்.


ஜப்பானின் நிதி அமைச்சகம் நடத்திய ஒரு கருத்தரங்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள 10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 

40 புள்ளி உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், எண்ணெய் விலைகளில் 10% அதிகரிப்பு, ஆண்டின் முழுவதும் நீடித்தால், உலகளாவிய பணவீக்கத்தின் பாரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் நள்ளிரவு முதல் அதிரடியாக உயர்ந்தது எரிபொருள் விலை இலங்கையில் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே  இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும். 329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 353 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.அதேநேரம் ஐ.ஓ.சி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது விலைகளை திருத்தம் செய்துள்ளது.இந்த விலை மாற்றம்  நள்ளிரவுடன் நடைமுறையாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரு சிறிய தியாகமே" என எரிபொருள் விலை உயர்வு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்."ஈரானின் அணுவாயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் எரிபொருள் விலை மீண்டும் வேகமாக வீழ்ச்சியடையும். உலக அமைதிக்காக நாம் செய்யும் ஒரு சிறிய நிதித் தியாகம் இது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் முட்டாள்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய ரீதியில் பணவீக்கம் (Inflation) பாரியளவில் அதிகரிக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா எச்சரித்துள்ளார்.ஜப்பானின் நிதி அமைச்சகம் நடத்திய ஒரு கருத்தரங்கில் இதனை குறிப்பிட்டுள்ளார்.மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள 10 சதவீத எண்ணெய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 40 புள்ளி உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், எண்ணெய் விலைகளில் 10% அதிகரிப்பு, ஆண்டின் முழுவதும் நீடித்தால், உலகளாவிய பணவீக்கத்தின் பாரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement