• Mar 10 2026

நயினாதீவில் இரு பூசகர்களுக்கிடையே மோதல் - ஒருவர் வெட்டிப் படுகொலை

Chithra / Mar 10th 2026, 7:32 am
image

 

நயினாதீவில் இரு பூசகர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். 


குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.


சம்பவத்தில் கண்டியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நயினாதீவில் உள்ள ஆலயங்களில் கண்டி மற்றும் நுவரெலியா பகுதியை சேர்ந்த இரண்டு பூசகர்கள் பணியாற்றி வருகின்றனர். 

 

இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் நுவரெலியாவை சேர்ந்த பூசகரின் கத்தி குத்துக்கு இலக்காகி கண்டியை சேர்ந்த பூசகர் பலியானார்.

 

சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நயினாதீவில் இரு பூசகர்களுக்கிடையே மோதல் - ஒருவர் வெட்டிப் படுகொலை  நயினாதீவில் இரு பூசகர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.சம்பவத்தில் கண்டியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நயினாதீவில் உள்ள ஆலயங்களில் கண்டி மற்றும் நுவரெலியா பகுதியை சேர்ந்த இரண்டு பூசகர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டில் நுவரெலியாவை சேர்ந்த பூசகரின் கத்தி குத்துக்கு இலக்காகி கண்டியை சேர்ந்த பூசகர் பலியானார். சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement