மேல், சப்ரகமுவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானிப்பு செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது செயற்பாடுகளில் ஈடுபடுவதோ சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிகப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்பதால், போதியளவு தண்ணீர் பருகுமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணிந்து நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வடமாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை மட்டத்தில் அதிகரிக்கும் வெப்பம் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு மேல், சப்ரகமுவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானிப்பு செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது செயற்பாடுகளில் ஈடுபடுவதோ சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவது நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்பதால், போதியளவு தண்ணீர் பருகுமாறும், வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணிந்து நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை வடமாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.