• Sep 20 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் மிக கணிசமான அளவு வாக்குகள் கிடைக்கும் - கஜதீபன் நம்பிக்கை..!

Sharmi / Sep 11th 2024, 10:08 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் மிக கணிசமான அளவு வாக்குகளை பெறுவார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் அலுவலகத்தில் நேற்றையதினம்(10)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் ஒரு தேசிய இனம், எண்ணிக்கையின் அடிப்படையில் நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்க கூடிய காரணத்தினால் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக இருக்க முடியாது.

இது எங்களுக்கும் சொந்தமான நாடு அந்த அடிப்படையில் எங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் எங்களுடைய பிரச்சினைகளை தனித்துவமாக சொல்வதற்கும் உரிமையும் அதற்கான சந்தர்ப்பமும் எண்கள் அனைவருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் பொது வேட்பாளர் தமிழ் தேசிய கட்சிகளால் தமிழ் மக்களால் அங்கீகரிக்க கூடிய  எல்லா கட்சிகளினாலும் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளராக அவர் இருக்கிறார். 

அந்த அடிப்படையில் மிக கணிசமான அளவு வாக்குகளை அவர் தமிழர் பிரதேசங்களிலே ஈட்டுவார் என்ற நம்பிக்கையும் எல்லோருக்குமே இருக்கிறது.

ஆனால் தமிழ் தேசிய வேட்பாளர் காலத்துக்கு வருகிற பொழுது ஏன் இப்படியான வேட்பாளர் வரவேண்டும் என்ற கேள்விகளை எழுப்பியிருக்க கூடிய நிலைமையும்  சில சந்தர்ப்பங்களில் இருந்ததுண்டு.

அதற்கு உதாரணமாக  மட்டக்களப்பில் 1990 களிலே சத்துருக்கொண்டான் என்ற இடத்திலே கூடியிருந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்டிருக்க கூடிய மிலேச்சதனமான தாக்குதலுக்கு படுகொலை செய்யப்பட்டிருந்த மக்களுக்கு தூபி   ஒன்று அங்கே அமைக்க கூடிய நேரத்தில் அதிலே இறந்தவர்களுடைய பெயர் விபரங்கள்  தொடர்பாக மக்கள் அதனை காட்சிப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போது  அதை இராணுவத்தினர் பலவந்தமாக தடுக்கிற ஒரு செயற்பாடு இன்று நடந்துள்ளது. 

இந்த நாட்டில் காலம் காலமாக ஆண்ட கட்சிகளுக்கும், ஆளுகின்ற வெறியோடு இருக்கும் சிங்கள பௌத்த சிந்தனையோடு இருக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற ஒரு மன நிலையோடு இருக்க கூடிய சிலர் தமிழ் தேசிய கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு இங்கே இருப்பார்களேயானால் அவர்களிடம் நாங்கள் கேட்பது என்றைக்காவது சிங்கள அரச படையினால் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய எந்த நினைவாலயத்திலாவது  வேட்பாளர்கள் என்றைக்காவது அஞ்சலி செலுத்தியதுண்டா? 

இது ஒன்றுப்பட்ட நாடு, வடக்கு கிழக்கிலே பூர்வீகமாக இருக்க கூடிய தமிழ் தேசிய மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம். வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசிய வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது  என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம் நான் கேட்பது இப்படியான படுகொலை நடைபெற்ற்வவர்களது நினைவாலயங்களில் எங்களுடைய மக்கள் தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகிற போது இந்த வேட்பாளர்களுடைய மனோநிலை என்னவாக இருக்கிறது? அல்லது வேட்பாளராக இருக்கிறவர்கள் முன்னதாக அரச பதவிகளில் இருக்கிற போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் நிலைகளில் இருந்த பொழுது இப்படியான நினைவாலயங்களிலே அஞ்சலி செலுத்தியதுண்டா? அல்லது ஒரு அனுதாபம் செலுத்தியதுண்டா என்பது தான் எங்களுடைய முக்கியமான கேள்வியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் மிக கணிசமான அளவு வாக்குகள் கிடைக்கும் - கஜதீபன் நம்பிக்கை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் மிக கணிசமான அளவு வாக்குகளை பெறுவார் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.யாழிலுள்ள தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் அலுவலகத்தில் நேற்றையதினம்(10)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாங்கள் ஒரு தேசிய இனம், எண்ணிக்கையின் அடிப்படையில் நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்க கூடிய காரணத்தினால் இந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜைகளாக இருக்க முடியாது. இது எங்களுக்கும் சொந்தமான நாடு அந்த அடிப்படையில் எங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் எங்களுடைய பிரச்சினைகளை தனித்துவமாக சொல்வதற்கும் உரிமையும் அதற்கான சந்தர்ப்பமும் எண்கள் அனைவருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் பொது வேட்பாளர் தமிழ் தேசிய கட்சிகளால் தமிழ் மக்களால் அங்கீகரிக்க கூடிய  எல்லா கட்சிகளினாலும் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளராக அவர் இருக்கிறார்.  அந்த அடிப்படையில் மிக கணிசமான அளவு வாக்குகளை அவர் தமிழர் பிரதேசங்களிலே ஈட்டுவார் என்ற நம்பிக்கையும் எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் தமிழ் தேசிய வேட்பாளர் காலத்துக்கு வருகிற பொழுது ஏன் இப்படியான வேட்பாளர் வரவேண்டும் என்ற கேள்விகளை எழுப்பியிருக்க கூடிய நிலைமையும்  சில சந்தர்ப்பங்களில் இருந்ததுண்டு.அதற்கு உதாரணமாக  மட்டக்களப்பில் 1990 களிலே சத்துருக்கொண்டான் என்ற இடத்திலே கூடியிருந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் மேற்கொண்டிருக்க கூடிய மிலேச்சதனமான தாக்குதலுக்கு படுகொலை செய்யப்பட்டிருந்த மக்களுக்கு தூபி   ஒன்று அங்கே அமைக்க கூடிய நேரத்தில் அதிலே இறந்தவர்களுடைய பெயர் விபரங்கள்  தொடர்பாக மக்கள் அதனை காட்சிப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போது  அதை இராணுவத்தினர் பலவந்தமாக தடுக்கிற ஒரு செயற்பாடு இன்று நடந்துள்ளது. இந்த நாட்டில் காலம் காலமாக ஆண்ட கட்சிகளுக்கும், ஆளுகின்ற வெறியோடு இருக்கும் சிங்கள பௌத்த சிந்தனையோடு இருக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற ஒரு மன நிலையோடு இருக்க கூடிய சிலர் தமிழ் தேசிய கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு இங்கே இருப்பார்களேயானால் அவர்களிடம் நாங்கள் கேட்பது என்றைக்காவது சிங்கள அரச படையினால் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய எந்த நினைவாலயத்திலாவது  வேட்பாளர்கள் என்றைக்காவது அஞ்சலி செலுத்தியதுண்டா இது ஒன்றுப்பட்ட நாடு, வடக்கு கிழக்கிலே பூர்வீகமாக இருக்க கூடிய தமிழ் தேசிய மக்கள் சிங்கள கட்சிகளுக்கும் வாக்களிக்கலாம். வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசிய வேட்பாளருக்கு வாக்களிக்க கூடாது  என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடம் நான் கேட்பது இப்படியான படுகொலை நடைபெற்ற்வவர்களது நினைவாலயங்களில் எங்களுடைய மக்கள் தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகிற போது இந்த வேட்பாளர்களுடைய மனோநிலை என்னவாக இருக்கிறது அல்லது வேட்பாளராக இருக்கிறவர்கள் முன்னதாக அரச பதவிகளில் இருக்கிற போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் நிலைகளில் இருந்த பொழுது இப்படியான நினைவாலயங்களிலே அஞ்சலி செலுத்தியதுண்டா அல்லது ஒரு அனுதாபம் செலுத்தியதுண்டா என்பது தான் எங்களுடைய முக்கியமான கேள்வியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement