• Oct 16 2026

திருகோணமலையில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள்; 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

dorin / Oct 15th 2026, 12:40 pm
image

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டங்களுக்காக 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இனவாதத்திற்கோ பிரதேசவாதத்திற்கோ இடமளிக்கப்படுவதில்லை எனவும், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எம். ஹேமந்த குமாரவின் நெறிப்படுத்தலின் கீழ், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று (15)  நடைபெற்றது. இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகின்றோம். மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கும், அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் பல்வேறு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான துணைக்குழு, சிறுவர் பாதுகாப்புத் துணைக்குழு, சுற்றுலாத்துறைத் துணைக்குழு, போக்குவரத்துத் துணைக்குழு, சுகாதாரத் துணைக்குழு மற்றும் கல்வித்துறை சார்ந்த துணைக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தத் துணைக்குழுக்களின் ஊடாக ஒவ்வொரு துறையிலும் காணப்படும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது அரசாங்கத்தின் இரண்டு வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்றாகும்.

மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதுடன், மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பல்வேறு துறைகளிலும் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை இன, மத வேறுபாடுகளின் அடிப்படையில் முன்னெடுத்து வருவதாகப் பல்வேறு பொய்யான பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும், இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. மாவட்டத்தின் அபிவிருத்தியை இன, மத அல்லது பிரதேச வேறுபாடுகளின் அடிப்படையில் நாம் முன்னெடுப்பதில்லை. மக்களின் தேவைகளையும் பிரதேசங்களின் அபிவிருத்தி முன்னுரிமைகளையும் கருத்திற்கொண்டே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்காக 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரங்களே மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் பரந்தளவில் முன்னெடுக்கப்படுவதற்கான சான்றாகும்.

இதற்கு மேலதிகமாக, மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விசேட அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாணம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவை மேம்படுத்தும் திட்டம் மற்றும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள மூதூர் கட்டைப்பறிச்சான் பால நிர்மாணம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் அனைத்தும் மாவட்ட மக்களின் போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து, அவற்றின் அபிவிருத்திக்கான பரிந்துரைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனவே, அபிவிருத்திப் பணிகளை அரசியல் நோக்கில் அணுகுவது பொருத்தமானதல்ல.

இருப்பினும், உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் இனரீதியாக முன்னெடுக்கப்படுவதாகச் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை.

மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிலைப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அபிவிருத்திப் பணிகளில் அரசியல் செய்வதைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இந்த கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரொசான் 

அக்மீமன, இம்ரான் மஹரூப் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.

கிழக்கு மாகாண அரச அதிகாரிகள், அரச திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள்; 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டங்களுக்காக 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் இனவாதத்திற்கோ பிரதேசவாதத்திற்கோ இடமளிக்கப்படுவதில்லை எனவும், தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜி. எம். ஹேமந்த குமாரவின் நெறிப்படுத்தலின் கீழ், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று (15)  நடைபெற்றது. இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகின்றோம். மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கும், அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் பல்வேறு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான துணைக்குழு, சிறுவர் பாதுகாப்புத் துணைக்குழு, சுற்றுலாத்துறைத் துணைக்குழு, போக்குவரத்துத் துணைக்குழு, சுகாதாரத் துணைக்குழு மற்றும் கல்வித்துறை சார்ந்த துணைக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இந்தத் துணைக்குழுக்களின் ஊடாக ஒவ்வொரு துறையிலும் காணப்படும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது அரசாங்கத்தின் இரண்டு வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்றாகும்.மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதுடன், மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு பல்வேறு துறைகளிலும் விரிவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை இன, மத வேறுபாடுகளின் அடிப்படையில் முன்னெடுத்து வருவதாகப் பல்வேறு பொய்யான பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனினும், இக்குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. மாவட்டத்தின் அபிவிருத்தியை இன, மத அல்லது பிரதேச வேறுபாடுகளின் அடிப்படையில் நாம் முன்னெடுப்பதில்லை. மக்களின் தேவைகளையும் பிரதேசங்களின் அபிவிருத்தி முன்னுரிமைகளையும் கருத்திற்கொண்டே திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 2,375 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்காக 12,802 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரங்களே மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் பரந்தளவில் முன்னெடுக்கப்படுவதற்கான சான்றாகும்.இதற்கு மேலதிகமாக, மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு விசேட அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாணம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவை மேம்படுத்தும் திட்டம் மற்றும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள மூதூர் கட்டைப்பறிச்சான் பால நிர்மாணம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இத்திட்டங்கள் அனைத்தும் மாவட்ட மக்களின் போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து, அவற்றின் அபிவிருத்திக்கான பரிந்துரைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எனவே, அபிவிருத்திப் பணிகளை அரசியல் நோக்கில் அணுகுவது பொருத்தமானதல்ல.இருப்பினும், உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் இனரீதியாக முன்னெடுக்கப்படுவதாகச் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை.மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிலைப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அபிவிருத்திப் பணிகளில் அரசியல் செய்வதைத் தவிர்க்குமாறு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடம் இந்தச் சந்தர்ப்பத்தில் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.இந்த கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன, இம்ரான் மஹரூப் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.கிழக்கு மாகாண அரச அதிகாரிகள், அரச திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement