• Jan 23 2025

வவுனியாவில் மக்கள் தைப்பொங்கலுக்கு மண்பானைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம்

Tharmini / Jan 13th 2025, 11:21 am
image

வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து, நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. 

பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.  நாளை (14) கொண்டாடப்படவுள்ள தைப்பொங்கல் பண்டிகை வவுனியாவில் களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பட்டாசு , தோரணங்கள் , கரும்பு என்பவற்றின் விற்பனையும் அதிகளவில் காணப்படுகின்றது.








வவுனியாவில் மக்கள் தைப்பொங்கலுக்கு மண்பானைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் வவுனியாவில் தைப்பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து, நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.  நாளை (14) கொண்டாடப்படவுள்ள தைப்பொங்கல் பண்டிகை வவுனியாவில் களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.இம்முறை மக்கள் மட்பாண்டப் பொருட்களை கொள்வனவு செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக மண்டபாண்ட உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பட்டாசு , தோரணங்கள் , கரும்பு என்பவற்றின் விற்பனையும் அதிகளவில் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement