• Jan 02 2025

நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்! ஜனவரியில் மோசமடையும் நிலை

Chithra / Dec 30th 2024, 8:18 am
image

 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சரைத் தொடர்பு கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் இதனால் ஜனவரியில் நிலைமை மோசமடையும் என்றும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்த்தின் தலைவர் சண்டிக கங்கந்த தெரிவிக்கையில்,

குறித்த முடிவினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். 

நாடாளவிய ரீதியில் செயற்படும் மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 

பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் பிரச்சினைகளுக்க முகங்கொடுகின்றார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவது அப்பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளது, ஏனெனில் அம்மக்கள் மருந்துகளைப் பெற கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

ஆகவே இந்த வியடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும் ஆபத்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது செயற்பாட்டில் உள்ள 5,100 மருந்தகங்களில், தகுதிவாய்ந்த மருந்தளர்கள் பற்றாக்குறையால் பல மருந்தகங்கள் மூடப்படும் நிலைமையில் உள்ளன. 

அத்தோடு தகுதிவாய்ந்த நபர்கள் வெளியேறுவதால் நாட்டில் மருந்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, இலங்கை மருத்துவ கவுன்சிலின் மீளாய்வுக்கு அமைவாக 6,700 மருந்தாளர்கள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளனர்.  என்றார்.

நாடளாவிய ரீதியில் மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஜனவரியில் மோசமடையும் நிலை  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையானது மருந்தகங்களின் செயற்பாட்டிற்கு தகுதிவாய்ந்த மருந்தாளரின் முழுநேர இருப்பை கட்டாயமாக்கியுள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த சில மாதங்களாக இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக அமைச்சரைத் தொடர்பு கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பல முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் இதனால் ஜனவரியில் நிலைமை மோசமடையும் என்றும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்த்தின் தலைவர் சண்டிக கங்கந்த தெரிவிக்கையில்,குறித்த முடிவினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாடாளவிய ரீதியில் செயற்படும் மருந்தகங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகள் பிரச்சினைகளுக்க முகங்கொடுகின்றார்கள்.கிராமப்புறங்களில் உள்ள மருந்தகங்கள் மூடப்படுவது அப்பகுதிகளில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு இடையூறாக உள்ளது, ஏனெனில் அம்மக்கள் மருந்துகளைப் பெற கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆகவே இந்த வியடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்து மோசமடையும் ஆபத்துள்ளது.நாடு முழுவதும் தற்போது செயற்பாட்டில் உள்ள 5,100 மருந்தகங்களில், தகுதிவாய்ந்த மருந்தளர்கள் பற்றாக்குறையால் பல மருந்தகங்கள் மூடப்படும் நிலைமையில் உள்ளன. அத்தோடு தகுதிவாய்ந்த நபர்கள் வெளியேறுவதால் நாட்டில் மருந்தாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நவம்பர் மாத நிலவரப்படி, இலங்கை மருத்துவ கவுன்சிலின் மீளாய்வுக்கு அமைவாக 6,700 மருந்தாளர்கள் மட்டுமே செயற்பாட்டில் உள்ளனர்.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement