புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் மூலம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் தேசிய மின் கட்டமைப்பிற்கு 500 மெகாவாட் மின் அலகை இணைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி சுமார் 1,400 மெகாவாட்டாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினை குறித்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது முதலீட்டாளர்கள் கணிசமான அளவு பங்குபற்றியுள்ளனர்.
பிராந்தியத்தில் அதிக அளவான எரிசக்தியினை செலவிடும் நாடாக இருந்த போதிலும், இந்த நிலைமையினை மாற்றி நியாயமான மற்றும் மலிவான விலையில் எரிசக்தியினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வரும் தனியார் துறைக்கு அரசாங்கம் போதுமான வசதி வாய்ப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இது அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் முன்னேற்றகரமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு 500 மெகாவாட் மின் அலகை இணைக்க அரசு திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களின் மூலம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் தேசிய மின் கட்டமைப்பிற்கு 500 மெகாவாட் மின் அலகை இணைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி சுமார் 1,400 மெகாவாட்டாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எரிசக்தி அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் இது தொடர்பாக எதிர்நோக்கப்படும் பிரச்சினை குறித்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது முதலீட்டாளர்கள் கணிசமான அளவு பங்குபற்றியுள்ளனர். பிராந்தியத்தில் அதிக அளவான எரிசக்தியினை செலவிடும் நாடாக இருந்த போதிலும், இந்த நிலைமையினை மாற்றி நியாயமான மற்றும் மலிவான விலையில் எரிசக்தியினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய முன்வரும் தனியார் துறைக்கு அரசாங்கம் போதுமான வசதி வாய்ப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இது அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் முன்னேற்றகரமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.