• Sep 20 2024

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு..!மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி..!samugammedia

Sharmi / May 28th 2023, 9:56 am
image

Advertisement

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகின்றது.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று காலையில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் திறப்பு விழா தொடங்கியுள்ளது.

மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்பட்டுள்ளதுடன், யாக சாலை பூஜையில் செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.

செங்கோலை  பிரதமர் மோடி விழுந்து வணங்கியதுடன் அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் செங்கோலை வழங்கினார்கள்.  செங்கோலை பெற்ற பிரதமர் மோடி  ஒவ்வொரு ஆதீனத்திடமும் ஆசி பெற்றார்.

அதையடுத்து, ஓதுவார்கள் முன் சென்று தமிழ் மறைகள் ஓத, இசை வாத்தியங்கள் முழங்க பிரதமர் மோடி செங்கோலை ஏந்தியபடி புதிய பாராளுமன்றத்திற்குள் சென்றார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவியுள்ளார்.

அதன்பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான கல்வெட்டை பிரதமர் திறந்து வைத்துள்ளதுடன், பாராளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கௌரவித்துள்ளார்.



புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு.மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி.samugammedia புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகின்றது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று காலையில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் திறப்பு விழா தொடங்கியுள்ளது. மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோல் வைக்கப்பட்டுள்ளதுடன், யாக சாலை பூஜையில் செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. செங்கோலை  பிரதமர் மோடி விழுந்து வணங்கியதுடன் அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் செங்கோலை வழங்கினார்கள்.  செங்கோலை பெற்ற பிரதமர் மோடி  ஒவ்வொரு ஆதீனத்திடமும் ஆசி பெற்றார். அதையடுத்து, ஓதுவார்கள் முன் சென்று தமிழ் மறைகள் ஓத, இசை வாத்தியங்கள் முழங்க பிரதமர் மோடி செங்கோலை ஏந்தியபடி புதிய பாராளுமன்றத்திற்குள் சென்றார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவியுள்ளார். அதன்பின்னர் புதிய பாராளுமன்றத்திற்கான கல்வெட்டை பிரதமர் திறந்து வைத்துள்ளதுடன், பாராளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கௌரவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement