• Sep 20 2024

மஸ்கெலியா பிரதேசத்தில் தொடர்மழை - நீர்த்தேக்கங்களின் வான் கதவு வழியாக வெளியேற்றப்படும் நீர்...!

Anaath / May 30th 2024, 5:25 pm
image

Advertisement

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மழையால் நீர் ஏந்து பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மேல் கொத்மலை மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவு வழியாக நீர் வெளியேற்றப்படுவதாக அந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மவுஸ்சாக்கலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது உள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது அதன் கொள்ளளவை எட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்த  நேரத்திலும் வான் கதவு திறந்து விட படலாம்  ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது அத்துடன் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் மிகவும் வீழ்ச்சி காணப் படுகிறது பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் விவசாய தொழில் முற்றாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இப் பகுதியில் சகல மரக்கறிகளும் சற்று விலை உயர்ந்து உள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் அதிகளவில் பனி  மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பணித்துள்ளார்.

மஸ்கெலியா பிரதேசத்தில் தொடர்மழை - நீர்த்தேக்கங்களின் வான் கதவு வழியாக வெளியேற்றப்படும் நீர். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மழையால் நீர் ஏந்து பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மேல் கொத்மலை மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவு வழியாக நீர் வெளியேற்றப்படுவதாக அந்த அந்தப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் மவுஸ்சாக்கலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது உள்ளது. காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது அதன் கொள்ளளவை எட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் எந்த  நேரத்திலும் வான் கதவு திறந்து விட படலாம்  ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுக்கின்றனர்.தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டு உள்ளது அத்துடன் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் மிகவும் வீழ்ச்சி காணப் படுகிறது பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு உள்ளனர்.மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் விவசாய தொழில் முற்றாக பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் இப் பகுதியில் சகல மரக்கறிகளும் சற்று விலை உயர்ந்து உள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் அதிகளவில் பனி  மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பணித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement