• Apr 23 2026

யாழில் டீசலை பதுக்கிய இருவருக்கு நடந்த சம்பவம்; பொலிஸார் அதிரடி

Chithra / Mar 4th 2026, 8:00 am
image

 யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது அவர்களிடமிருந்து 800 லீட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸால் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் டீசலை பதுக்கிய இருவருக்கு நடந்த சம்பவம்; பொலிஸார் அதிரடி  யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது அவர்களிடமிருந்து 800 லீட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன பொலிஸால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement