• Jan 26 2025

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் முதலைகள் அதிகரிப்பு - மக்கள் அச்சம்

Anaath / May 24th 2024, 5:20 pm
image

புத்தளம் எலுவாங்குளம் பிரதேசத்தில் உள்ள  தாமரைக்குளத்தில் தற்பொழுது அதிகளவிலான முதலைகள் சஞ்சரிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

குறித்த முதலைகள் ஆடு மாடுகளை வேட்டையாடுவதாகவும் இதனால் தாம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த குளத்தில் முதலைகள் சஞ்சரிப்பதாக எந்த ஒரு பதாகைகளும் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும்  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வெளிப் பிரதேசங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் குறித்த குளத்தில் வான் பாயும் பகுதிக்கு குளிப்பதற்கு வருகை தருகின்றனர். 

எனவே  குறித்த பகுதியில் குளிப்பதற்கு பாதுகாப்பு வலைகளை அமைத்துத் தருமாறும்  அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

00:00

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் முதலைகள் அதிகரிப்பு - மக்கள் அச்சம் புத்தளம் எலுவாங்குளம் பிரதேசத்தில் உள்ள  தாமரைக்குளத்தில் தற்பொழுது அதிகளவிலான முதலைகள் சஞ்சரிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறித்த முதலைகள் ஆடு மாடுகளை வேட்டையாடுவதாகவும் இதனால் தாம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அத்துடன் குறித்த குளத்தில் முதலைகள் சஞ்சரிப்பதாக எந்த ஒரு பதாகைகளும் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும்  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் வெளிப் பிரதேசங்களில் இருந்தும் அதிகளவிலான மக்கள் குறித்த குளத்தில் வான் பாயும் பகுதிக்கு குளிப்பதற்கு வருகை தருகின்றனர். எனவே  குறித்த பகுதியில் குளிப்பதற்கு பாதுகாப்பு வலைகளை அமைத்துத் தருமாறும்  அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement