புத்தளம், மஹாவெவ - கொஸ்வாடிய பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது பாரிய மரமொன்று இன்று (24) பகல் சரிந்து வீழ்ந்ததில் அந்தக் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் மாரவில தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த கார் மஹாவெவ , கொஸ்வாடிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து குறித்த காரின் நடுவில் வீழ்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் கூறினார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த மரம் வீழ்ந்ததில் குறித்த காருக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அந்த காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஏழு வயது மகள் என மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மரம் காரின் மீது விழுந்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக செயற்பட்டதான் காரணமாக காருக்குள் இருந்த மூவரும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்
மரம் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம். புத்தளம், மஹாவெவ - கொஸ்வாடிய பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது பாரிய மரமொன்று இன்று (24) பகல் சரிந்து வீழ்ந்ததில் அந்தக் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் மாரவில தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த கார் மஹாவெவ , கொஸ்வாடிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, வீதியோரத்தில் நின்ற பெரிய மரமொன்று முறிந்து குறித்த காரின் நடுவில் வீழ்ந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரியொருவர் கூறினார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அந்த மரம் வீழ்ந்ததில் குறித்த காருக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அந்த காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஏழு வயது மகள் என மூவர் காயமடைந்துள்ளனர்.குறித்த மரம் காரின் மீது விழுந்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக செயற்பட்டதான் காரணமாக காருக்குள் இருந்த மூவரும் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்