• Sep 19 2024

நுழைவு கட்டணம் அதிகரிப்பு..! ஆனால் இவர்களுக்கு விலக்கு! samugammedia

Chithra / Jul 1st 2023, 1:56 pm
image

Advertisement

இன்று முதல் நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பூங்காவிற்குள் நுழைவதற்கான பெரியவர்கள் மற்றும் பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அனுமதிக் கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டு வயதுக்குட்பட்ட உள்ளூர் குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


புதிய வர்த்தமானியின்படி, அறுபது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் தாவரவியல் பூங்காவிற்குள் நுழைய 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் வயதை சரிபார்க்க அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, 12 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டு குழந்தைகளுக்கான அனுமதி கட்டணம் 1,500 ரூபாவாகவும், வெளிநாட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக 2,000 ரூபாவில் அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையில், தாவரவியல் பூங்கா எல்லைக்குள் வசிப்பவர்கள், உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தோட்டத்திற்குள் நுழையும் அரசாங்க ஊழியர்கள், பணிப்பாளர் நாயகத்தால் இலவச அனுமதி பெற்ற நபர்கள் மற்றும் அரசாங்கத்தால் விருந்தளிக்கும் பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.


நுழைவு கட்டணம் அதிகரிப்பு. ஆனால் இவர்களுக்கு விலக்கு samugammedia இன்று முதல் நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, பூங்காவிற்குள் நுழைவதற்கான பெரியவர்கள் மற்றும் பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அனுமதிக் கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.பன்னிரண்டு வயதுக்குட்பட்ட உள்ளூர் குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி கட்டணம் 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.புதிய வர்த்தமானியின்படி, அறுபது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் தாவரவியல் பூங்காவிற்குள் நுழைய 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் வயதை சரிபார்க்க அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.இதேவேளை, 12 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினருக்கான நுழைவுக் கட்டணம் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.12 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டு குழந்தைகளுக்கான அனுமதி கட்டணம் 1,500 ரூபாவாகவும், வெளிநாட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சலுகைக் கட்டணமாக 2,000 ரூபாவில் அனுமதிக்கப்படுவார்கள்.இதற்கிடையில், தாவரவியல் பூங்கா எல்லைக்குள் வசிப்பவர்கள், உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தோட்டத்திற்குள் நுழையும் அரசாங்க ஊழியர்கள், பணிப்பாளர் நாயகத்தால் இலவச அனுமதி பெற்ற நபர்கள் மற்றும் அரசாங்கத்தால் விருந்தளிக்கும் பார்வையாளர்கள் நுழைவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement