• May 17 2024

கிளிநொச்சியில் வயது குறைந்தவர்களுக்கு 5க்கு ஒன்று எனும் விகிதத்தில் பியர் வியாபாரம் - மக்கள் குற்றச்சாட்டு samugammedia

Chithra / Jul 1st 2023, 2:12 pm
image

Advertisement

வயது குறைந்தவர்களுக்கு 5க்கு ஒன்று எனும் விகிதத்தில் பியர் வியாபாரம் இடம்பெறுவதாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவித்த அக்கராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் முருகையா இராசலிங்கம் குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோத மதுபான சாலைகள் மக்கள் குடியிருப்புக்குள் அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனுமதியில் மக்கள் பயன்பாட்டு வீதியே தரிப்பிடமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், பொருத்தமற்ற இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ அச்சமான சூழல் காணப்படுகின்றது. அந்த பகுதி மறைவுகள் கொண்ட பிரதேசமாக இருப்பதால், அச்ச நிலை எழுந்துள்ளது.

வயது குறைந்தவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் வேறு நபர்களைக் கொண்டு வாங்குகின்றனர். அவர்களிற்கு 5 க்கு ஒன்று எனும் அடிப்படையில் கொடுக்கின்றனர்.

அவற்றை பற்றை மறைவுகள், குளக்கட்டுக்களில் இருந்து அருந்துகின்றனர். மேலும், வீதிகளில் நின்றும் மது அருந்துகின்றனர். வெளி பிரதேசங்களில் இருந்தும் வருவதனால் பிரதேசத்தில் பாதுகாப்பில்லாமல் போகிறது. 

இரவு 11 மணிக்கு மேல் திறந்துள்ளது. அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்கள் காணப்படுகிறது. இதனால் பெரும் ஆபத்தான நிலை எமது கிராமத்துக்கு எழுந்துள்ளது.

குறித்த மதுபான நிலையத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் வயது குறைந்தவர்களுக்கு 5க்கு ஒன்று எனும் விகிதத்தில் பியர் வியாபாரம் - மக்கள் குற்றச்சாட்டு samugammedia வயது குறைந்தவர்களுக்கு 5க்கு ஒன்று எனும் விகிதத்தில் பியர் வியாபாரம் இடம்பெறுவதாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த தெரிவித்த அக்கராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் முருகையா இராசலிங்கம் குறிப்பிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,சட்டவிரோத மதுபான சாலைகள் மக்கள் குடியிருப்புக்குள் அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனுமதியில் மக்கள் பயன்பாட்டு வீதியே தரிப்பிடமாக காண்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில், பொருத்தமற்ற இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ அச்சமான சூழல் காணப்படுகின்றது. அந்த பகுதி மறைவுகள் கொண்ட பிரதேசமாக இருப்பதால், அச்ச நிலை எழுந்துள்ளது.வயது குறைந்தவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் வேறு நபர்களைக் கொண்டு வாங்குகின்றனர். அவர்களிற்கு 5 க்கு ஒன்று எனும் அடிப்படையில் கொடுக்கின்றனர்.அவற்றை பற்றை மறைவுகள், குளக்கட்டுக்களில் இருந்து அருந்துகின்றனர். மேலும், வீதிகளில் நின்றும் மது அருந்துகின்றனர். வெளி பிரதேசங்களில் இருந்தும் வருவதனால் பிரதேசத்தில் பாதுகாப்பில்லாமல் போகிறது. இரவு 11 மணிக்கு மேல் திறந்துள்ளது. அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்கள் காணப்படுகிறது. இதனால் பெரும் ஆபத்தான நிலை எமது கிராமத்துக்கு எழுந்துள்ளது.குறித்த மதுபான நிலையத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement