• Nov 24 2024

உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை தொடர வழங்கப்படும் கடன் தொகை அதிகரிப்பு...!

Sharmi / Jun 8th 2024, 1:13 pm
image

கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகை, பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கடன் தொகையை வழங்குவதற்கு இலங்கை வங்கி ஏற்பாடுகளை செய்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று முறைக்கு மிகாமல் சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தக் கடன் வட்டியில்லாது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை தொடர வழங்கப்படும் கடன் தொகை அதிகரிப்பு. கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைவதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட கடன் தொகை, பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த கடன் தொகையை வழங்குவதற்கு இலங்கை வங்கி ஏற்பாடுகளை செய்துள்ளது.உயர்தரப் பரீட்சையில் மூன்று முறைக்கு மிகாமல் சித்தியடைந்த மாணவர்கள் மட்டுமே இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.இந்தக் கடன் வட்டியில்லாது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement