இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவு (Workers' Remittances) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக அதிகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இலங்கை 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி,
2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது.
2025 மார்ச் மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
அதற்கமைய, 2026 மார்ச் மாதத்திலான பணவனுப்பல் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீத அதிகரிப்பு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவு (Workers' Remittances) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இலங்கை 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி,2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது. 2025 மார்ச் மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. அதற்கமைய, 2026 மார்ச் மாதத்திலான பணவனுப்பல் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீத அதிகரிப்பு என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.