• Sep 20 2024

சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு!

Chithra / Dec 20th 2022, 12:55 pm
image

Advertisement

கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்படும் போது 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் 855.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் 1129.4 மில்லியன் டொலர் வருமானம்

கடந்த 2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலத்தில் சுற்றுலாத்துறை மூலம் மொத்தமாக 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்தது.

2022 ஆம் ஆண்டில் அந்த வருமானமானது ஆயிரத்து 129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.


இதனிடையே 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 989 முதல் 6 லட்சத்து 28 ஆயிரத்து 17 வரை அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 28 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 44 ஆயிரத்து 294 இருந்து 59 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மேலதிக 15 ஆயிரத்து 465 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மேலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பி வைக்கும் அந்நிய செலாவணியானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் கடந்த 11 மாதங்களில் 1021.7 பில்லியன் ரூபாவில் இருந்து 1079.8 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது எனவும் இலங்கை மத்திய வங்கி வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்படும் போது 2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலம் கிடைத்த வருமானம் 855.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சுற்றுலாத்துறை மூலம் 1129.4 மில்லியன் டொலர் வருமானம்கடந்த 2021 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான 11 மாத காலத்தில் சுற்றுலாத்துறை மூலம் மொத்தமாக 273.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்தது.2022 ஆம் ஆண்டில் அந்த வருமானமானது ஆயிரத்து 129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.இதனிடையே 2021 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 989 முதல் 6 லட்சத்து 28 ஆயிரத்து 17 வரை அதிகரித்துள்ளது.2022 ஆம் ஆண்டில் மாத்திரம் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 28 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 44 ஆயிரத்து 294 இருந்து 59 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மேலதிக 15 ஆயிரத்து 465 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.மேலும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பி வைக்கும் அந்நிய செலாவணியானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் கடந்த 11 மாதங்களில் 1021.7 பில்லியன் ரூபாவில் இருந்து 1079.8 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது எனவும் இலங்கை மத்திய வங்கி வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement