• Sep 19 2024

Sharmi / Jul 25th 2023, 2:59 pm
image

Advertisement

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக வருபவர்கள் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் வலைகளில் மீன்கள் குறைவாகவே பிடிபடுவதாகவும் பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்

திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் திருக்கை மீன் ஒரு கிலோகிராம் 800 ரூபாவுக்கும், நெத்தலி 1,500 ரூபாவுக்கும், கனவாய் 1,100 ரூபாவுக்கும், இறால் 1,200 ரூபாவுக்கும் விற்பனையாகி வருகின்றது.

அதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


மீன்களின் விலை அதிகரிப்பு. பொதுமக்கள் கவலை.samugammedia திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.காற்றின் வேகம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் வீதம் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக வருபவர்கள் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதினால் வலைகளில் மீன்கள் குறைவாகவே பிடிபடுவதாகவும் பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்திருகோணமலை மீன் பொதுச் சந்தையில் திருக்கை மீன் ஒரு கிலோகிராம் 800 ரூபாவுக்கும், நெத்தலி 1,500 ரூபாவுக்கும், கனவாய் 1,100 ரூபாவுக்கும், இறால் 1,200 ரூபாவுக்கும் விற்பனையாகி வருகின்றது.அதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement