• Sep 19 2024

கைவேலி மக்கள் தற்காலிகமாக குடியிருக்க அனுமதி! இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர தீர்வு! உறுதிமொழியுடன் கைவிடப்பட்டது உணவுதவிர்ப்பு போராட்டம்! samugammedia

Chithra / Jul 25th 2023, 3:00 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி கிராமத்தில்  காணிகளற்ற மக்கள் குறித்த பகுதியில் உள்ள 45 வீட்டுத்திட்டம் பகுதியில் காணிகளை துப்பரவு செய்து குடியிருந்த போது   வனவள திணைக்களத்தினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தம்மீது வழக்கு தொடர்வதாகவும் தெரிவித்து நேற்றைய தினம் நால்வர் தம்மை தமது காணியில் குடியேற்றுமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் முல்லைதீவ மாவட்ட மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் நில அளவை திணைக்களத்தினுடைய அதிகாரிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் வனவள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்த இடத்திற்கு வருகை தந்து குறித்த காணிகளை பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த மக்கள் குடியேறிய பகுதி வனவளதிணைக்களத்தினுடைய பகுதிக்குள் இல்லை என நில அளவைத் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இதன் பின்னணியில் குறித்த பகுதியில் மக்களின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக அவர்களுக்கு இருப்பதற்கு இடமில்லாத அடிப்படையில் அபிவிருத்தி பணிகளை செய்யாமல் ஏற்கனவே அமைத்த கொட்டல்களில் தற்காலிகமாக குடியிருக்குமாறும் இரண்டு கிழமைகளில் தாங்கள் நில அளவை தினைகளத்தினுடைய வேலைகளை முடித்து உரிய வகையிலே காணிகளை பகிர்ந்து அளிப்பதாகவும் அதன் பின்னர் அவர்களை உரிய இடங்களில் குடியேறுமாறும் முல்லை தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் தெரிவித்து இருந்தார்.

இந்த உறுதிமொழிக்கு அமைவாக குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


கைவேலி மக்கள் தற்காலிகமாக குடியிருக்க அனுமதி இரண்டு வாரங்களுக்குள் நிரந்தர தீர்வு உறுதிமொழியுடன் கைவிடப்பட்டது உணவுதவிர்ப்பு போராட்டம் samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி கிராமத்தில்  காணிகளற்ற மக்கள் குறித்த பகுதியில் உள்ள 45 வீட்டுத்திட்டம் பகுதியில் காணிகளை துப்பரவு செய்து குடியிருந்த போது   வனவள திணைக்களத்தினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் தம்மீது வழக்கு தொடர்வதாகவும் தெரிவித்து நேற்றைய தினம் நால்வர் தம்மை தமது காணியில் குடியேற்றுமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்றைய தினம் முல்லைதீவ மாவட்ட மேலதிக அரச அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் நில அளவை திணைக்களத்தினுடைய அதிகாரிகள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் வனவள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்த இடத்திற்கு வருகை தந்து குறித்த காணிகளை பார்வையிட்டிருந்தனர்.இந்நிலையில் குறித்த மக்கள் குடியேறிய பகுதி வனவளதிணைக்களத்தினுடைய பகுதிக்குள் இல்லை என நில அளவைத் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியிருந்தனர்.இதன் பின்னணியில் குறித்த பகுதியில் மக்களின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக அவர்களுக்கு இருப்பதற்கு இடமில்லாத அடிப்படையில் அபிவிருத்தி பணிகளை செய்யாமல் ஏற்கனவே அமைத்த கொட்டல்களில் தற்காலிகமாக குடியிருக்குமாறும் இரண்டு கிழமைகளில் தாங்கள் நில அளவை தினைகளத்தினுடைய வேலைகளை முடித்து உரிய வகையிலே காணிகளை பகிர்ந்து அளிப்பதாகவும் அதன் பின்னர் அவர்களை உரிய இடங்களில் குடியேறுமாறும் முல்லை தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் தெரிவித்து இருந்தார்.இந்த உறுதிமொழிக்கு அமைவாக குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement