• Dec 09 2024

சரியான வழிகாட்டலுக்கு வலுச்சேருங்கள் - இல்லையேல் நாடாளுமன்ற பிரதிநிதித்தவமும் கேள்விக்குறியாகும் - திருமலையில் அமைச்சர் டக்ளஸ்!

Chithra / Sep 18th 2024, 4:12 pm
image

 

கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியும் நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது. அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என கோருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்.  குறிப்பாக அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஈ.பி.டி.பியினராகிய எமது வழிமுறையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வை தரும். 

எம்முடன் இணைந்து பயணியுங்கள் என நான் மூன்று தசாப்தங்களாக திருமலை மாவட்ட மக்களிடம் அழைப்பு விடுத்து வந்திருந்த போதும் அவர்கள் தவறானவர்களின் வழிநடத்தலிலிருந்து மீளமுடியாதிருந்தமையால் பல்வேறு அசௌகரியங்களை இன்றுவரை எதிர்கொண்டுவர நேர்ந்துள்ளது. 

இதேநேரம் குறித்த தவறான வழிநடத்தலை மக்கள் ஓரங்கட்டி அதிலிருந்து வெளிவராவிட்டால் இம்மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இன்வரும் காலத்தில் இல்லாதுபோகும் சூழ்நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றுவரை இருந்துவருவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது 

அதற்கு திருமலை மாவட்டத்தில் நாம் அன்று எமக்கிருந்த அரசியல் பிரதிநிதித்துவத்தினூடான செய்த குடியேற்றத் திட்டங்களும் சேவைகளுமே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. அதேபோன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை உள்ளூராட்சி மன்ற தேர்தல்களும் விரைவில் வருவதற்கான காலச் சூழலும் வந்துகொண்டிருக்கின்றது.

நாட்டுக்கு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி எவ்வாறு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேனோ அதேபோன்றுதான் இம்மாவட்டத்திற்கு ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவ பலமும் அவசியமானதொன்றாக இருக்கின்றது.

அதனடிப்படையில் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியை வலுப்படுத்துவது போன்று எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஈ.பிடி.பியின் பலத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அதனூடாகவே இம்மாவட்டத்தில் வாழும் எமது மக்களின் அபிலாசைகள் அதன் இலக்கை எட்டும் என நினைக்கின்றேன்.

இதேவேளை தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள்.

எம்மை நம்பி உங்கள் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம். நாம் சொல்வதைத்தான் செய்வோம். ஜனாதிபதி ரணிலின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். என்று அவர் வலியுறுத்தியதுடன் அவரது வெற்றியே காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சரியான வழிகாட்டலுக்கு வலுச்சேருங்கள் - இல்லையேல் நாடாளுமன்ற பிரதிநிதித்தவமும் கேள்விக்குறியாகும் - திருமலையில் அமைச்சர் டக்ளஸ்  கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியும் நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது. அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என கோருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.குறித்த மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்.  குறிப்பாக அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதேநேரம் ஈ.பி.டி.பியினராகிய எமது வழிமுறையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வை தரும். எம்முடன் இணைந்து பயணியுங்கள் என நான் மூன்று தசாப்தங்களாக திருமலை மாவட்ட மக்களிடம் அழைப்பு விடுத்து வந்திருந்த போதும் அவர்கள் தவறானவர்களின் வழிநடத்தலிலிருந்து மீளமுடியாதிருந்தமையால் பல்வேறு அசௌகரியங்களை இன்றுவரை எதிர்கொண்டுவர நேர்ந்துள்ளது. இதேநேரம் குறித்த தவறான வழிநடத்தலை மக்கள் ஓரங்கட்டி அதிலிருந்து வெளிவராவிட்டால் இம்மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இன்வரும் காலத்தில் இல்லாதுபோகும் சூழ்நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றுவரை இருந்துவருவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது அதற்கு திருமலை மாவட்டத்தில் நாம் அன்று எமக்கிருந்த அரசியல் பிரதிநிதித்துவத்தினூடான செய்த குடியேற்றத் திட்டங்களும் சேவைகளுமே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. அதேபோன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை உள்ளூராட்சி மன்ற தேர்தல்களும் விரைவில் வருவதற்கான காலச் சூழலும் வந்துகொண்டிருக்கின்றது.நாட்டுக்கு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி எவ்வாறு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேனோ அதேபோன்றுதான் இம்மாவட்டத்திற்கு ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவ பலமும் அவசியமானதொன்றாக இருக்கின்றது.அதனடிப்படையில் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியை வலுப்படுத்துவது போன்று எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஈ.பிடி.பியின் பலத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அதனூடாகவே இம்மாவட்டத்தில் வாழும் எமது மக்களின் அபிலாசைகள் அதன் இலக்கை எட்டும் என நினைக்கின்றேன்.இதேவேளை தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள்.எம்மை நம்பி உங்கள் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம். நாம் சொல்வதைத்தான் செய்வோம். ஜனாதிபதி ரணிலின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். என்று அவர் வலியுறுத்தியதுடன் அவரது வெற்றியே காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement