• Mar 16 2026

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம்; மோட்டார் சைக்கிளுடன் மோதி கோர விபத்து

Chithra / Jan 6th 2026, 8:39 pm
image

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 


கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மரத்துடன் மோதி பின்னர் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.


இதன்போது குறித்த கெப் ரக வாகனத்தை செலுத்தி வந்தவர், காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கெப் ரக வாகனம் சேதமடைந்துள்ளதோடு, மோட்டார் சைக்கிலும் சேதமடைந்துள்ளது.


மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம்; மோட்டார் சைக்கிளுடன் மோதி கோர விபத்து மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன்-ஆண்டாங்குளம் பிரதான வீதியில் இன்று  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கடைகளுக்கு விநியோகிப்பதற்காக வாழைக்குலைகளை ஏற்றி வந்த கெப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மரத்துடன் மோதி பின்னர் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.இதன்போது குறித்த கெப் ரக வாகனத்தை செலுத்தி வந்தவர், காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கெப் ரக வாகனம் சேதமடைந்துள்ளதோடு, மோட்டார் சைக்கிலும் சேதமடைந்துள்ளது.மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement