பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, தமிழர் உரிமைகளுக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் இன்றையதினம் (18) பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ் பல்கலையிலுள்ள 15 விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து 2024 ஜனாதிபதி தேர்தலும், சிறுபான்மையின மக்களும் என்ற தலைப்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, தமிழர் உரிமைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து விரிவுரையாளர்களால் யாழ் பல்கலையில் சுவரொட்டி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, தமிழர் உரிமைகளுக்கு எதிராக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.குறித்த சுவரொட்டிகள் இன்றையதினம் (18) பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.நேற்றையதினம் யாழ் பல்கலையிலுள்ள 15 விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து 2024 ஜனாதிபதி தேர்தலும், சிறுபான்மையின மக்களும் என்ற தலைப்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, தமிழர் உரிமைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.