• Dec 05 2024

அதிகரித்தது அஸ்வெசும கொடுப்பனவு; பாடசாலை மாணவர்களுக்கும் உதவித்தொகை! அரசு அறிவிப்பு

Chithra / Dec 3rd 2024, 1:05 pm
image

 

நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்திர கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்திரம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (03) நாடாளுமன்றில்  கூறினார்.

அதேநேரம், 800,000 பெறுநர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 2025 மார்ச் 31 வரையிலும், மற்றொரு குழுக்களுக்கான கொடுப்பனவு 2024 டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பட்டார். 

அதேநேரம்   மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும்.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதிகரித்தது அஸ்வெசும கொடுப்பனவு; பாடசாலை மாணவர்களுக்கும் உதவித்தொகை அரசு அறிவிப்பு  நாடு முழுவதும் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடையும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் மாதாந்திர கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, எட்டு இலட்சம் பேருக்கு மாதாந்திரம் வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா நிவாரணக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மிகவும் வறிய நிலையில் உள்ள நான்கு இலட்சம் மக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர 15,000 ரூபா கொடுப்பனவு 17,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று (03) நாடாளுமன்றில்  கூறினார்.அதேநேரம், 800,000 பெறுநர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் 2025 மார்ச் 31 வரையிலும், மற்றொரு குழுக்களுக்கான கொடுப்பனவு 2024 டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பட்டார். அதேநேரம்   மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும்.பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement