• Nov 23 2024

அதிகரித்த வரி..! நாடளாவிய ரீதியில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Jan 2nd 2024, 3:16 pm
image


அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வுக்கு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கையை செய்யவேண்டும் என முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக  அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதை தெரிவித்தார். 

புதுவருடம் தொடங்கிய அன்றே   மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பேரதிச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முதலாம், இரண்டாம் வாசிப்பிலே சமர்ப்பிக்கப்பட்ட விடயத்தில் உண்மைகளை முடிமறைத்து 97 பொருட்களின் விலைவாசி உயர்த்தியிருக்கின்றது.

கடந்த 30 வருடம் யுத்த நடந்தபோதிலும் கூட இப்படியான வரி அதிகரிக்கப்படவில்லை. 

விலைவாசியும் அதிகரிக்கப்படவில்லை. பொருட்தட்டுப்பாடு எற்படவில்லை.

எற்கனவே இருந்த அரசாங்கங்களும் ஊழலுக்கு,  மோசடிக்கு, துஸ்பிரயோகத்திற்கு பெயர்போனதாக  இருந்தது. மக்களால் விரட்டப்பட்ட அரசாங்கமாக காணப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆதரவு பெறாமால் நாடாளுமன்ற பெரும்பாண்மையினை பெற்றுக்கொண்டு வந்து ஜனநாயக விரோத பாதீட்டினை நிறைவேற்றியுள்ளார்.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிப்பானது ஏழை மக்கள், அன்றாடம் கூலித்தொழினை செய்வர்கள், 

வடக்கு - கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மலையக  மக்களது வயிற்றில் பேரிடியாக காணப்படுகின்றது.

அரசாங்கம்  உடனடியாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வுக்கு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கையை செய்யவேண்டும்.

நீக்கதவறும் பட்சத்தில் தென்னிலங்கை மக்களும், நாடு பூராக வசிக்கும் மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அது மக்கள் போராட்டமாக வெடிக்கும் என்றார். 

அதிகரித்த வரி. நாடளாவிய ரீதியில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வுக்கு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கையை செய்யவேண்டும் என முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் ஊடக  அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதை தெரிவித்தார். புதுவருடம் தொடங்கிய அன்றே   மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பேரதிச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முதலாம், இரண்டாம் வாசிப்பிலே சமர்ப்பிக்கப்பட்ட விடயத்தில் உண்மைகளை முடிமறைத்து 97 பொருட்களின் விலைவாசி உயர்த்தியிருக்கின்றது.கடந்த 30 வருடம் யுத்த நடந்தபோதிலும் கூட இப்படியான வரி அதிகரிக்கப்படவில்லை. விலைவாசியும் அதிகரிக்கப்படவில்லை. பொருட்தட்டுப்பாடு எற்படவில்லை.எற்கனவே இருந்த அரசாங்கங்களும் ஊழலுக்கு,  மோசடிக்கு, துஸ்பிரயோகத்திற்கு பெயர்போனதாக  இருந்தது. மக்களால் விரட்டப்பட்ட அரசாங்கமாக காணப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆதரவு பெறாமால் நாடாளுமன்ற பெரும்பாண்மையினை பெற்றுக்கொண்டு வந்து ஜனநாயக விரோத பாதீட்டினை நிறைவேற்றியுள்ளார்.குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிப்பானது ஏழை மக்கள், அன்றாடம் கூலித்தொழினை செய்வர்கள், வடக்கு - கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மலையக  மக்களது வயிற்றில் பேரிடியாக காணப்படுகின்றது.அரசாங்கம்  உடனடியாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வுக்கு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கையை செய்யவேண்டும்.நீக்கதவறும் பட்சத்தில் தென்னிலங்கை மக்களும், நாடு பூராக வசிக்கும் மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அது மக்கள் போராட்டமாக வெடிக்கும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement