நீதிமன்ற கொலை வழக்கின் சந்தேக நபரான பெண்ணை இன்னமும் கைது செய்ய முடியாமல் இருப்பது மிகவும் பரிகாசத்திற்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
முன்னாள் சிறைச்சாலை அதிகாரியொருவர் அக்மீமன தலஹா பகுதியில் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
இன்னும் பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற்றன.
அதுபோலத்தான் அங்குனுஹல பிரதேசத்திலும் இளைஞர் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நமது நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு என்கின்ற விடயம் முற்று முழுதாக கீழ் மட்டத்திற்கு சென்று இருக்கிறது.
அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும். எமது நாட்டின் அரசாங்கம் குறித்து ஒரு அச்ச நிலை காணப்படுகிறது. வீதியில் செல்ல முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
வன்முறைகள் தாண்டவம் ஆடுகின்றன. காடையர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத நிலமைகள் மேலும் இருக்கின்றன.
சமூகத்தில் பீதி ஏற்பட்டு இருக்கின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடமிருந்து டியூஷன் வகுப்புகளை கற்றுக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. யாரிடமிருந்தாவது டியூஷன் வகுப்புகளை பெற்றாவது இந்த படுகொலைகளை வன்முறைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற கொலை தொடர்பில் சந்தேகநபரை இன்னும் தேடிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது எனத்தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்த பயங்கரவாத நிலைமை; பீதியில் மக்கள் - எதிர்க்கட்சித் தலைவர் கொந்தளிப்பு நீதிமன்ற கொலை வழக்கின் சந்தேக நபரான பெண்ணை இன்னமும் கைது செய்ய முடியாமல் இருப்பது மிகவும் பரிகாசத்திற்குரிய விடயமாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்முன்னாள் சிறைச்சாலை அதிகாரியொருவர் அக்மீமன தலஹா பகுதியில் மிக கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.இன்னும் பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற்றன. அதுபோலத்தான் அங்குனுஹல பிரதேசத்திலும் இளைஞர் ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் நமது நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு என்கின்ற விடயம் முற்று முழுதாக கீழ் மட்டத்திற்கு சென்று இருக்கிறது.அரசாங்கம் இதன் பொறுப்பை ஏற்க வேண்டும். எமது நாட்டின் அரசாங்கம் குறித்து ஒரு அச்ச நிலை காணப்படுகிறது. வீதியில் செல்ல முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. வன்முறைகள் தாண்டவம் ஆடுகின்றன. காடையர்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாத நிலமைகள் மேலும் இருக்கின்றன.சமூகத்தில் பீதி ஏற்பட்டு இருக்கின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு எங்களிடமிருந்து டியூஷன் வகுப்புகளை கற்றுக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. யாரிடமிருந்தாவது டியூஷன் வகுப்புகளை பெற்றாவது இந்த படுகொலைகளை வன்முறைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற கொலை தொடர்பில் சந்தேகநபரை இன்னும் தேடிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது எனத்தெரிவித்தார்.