இலங்கையில் மதுபான நுகர்வு கணிசமாக அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், மற்ற மதுபானங்களின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் மதுபானங்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாதது, நுகர்வு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பணவீக்கம் நிலவியிருந்த போதிலும், மக்களின் வாங்கும் திறன் உயர்ந்திருப்பதும் மதுபானங்களுக்கு உள்ள தேவை அதிகரிக்க காரணமாகியுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட வரி உயர்வுகள் விற்பனை அளவைக் குறைத்திருந்த போதிலும், தற்போதைய நிலையில் கலால் வரி வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிகரிக்கும் மதுபான நுகர்வு – வெளியான அறிக்கை இலங்கையில் மதுபான நுகர்வு கணிசமாக அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், மற்ற மதுபானங்களின் உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் மதுபானங்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாதது, நுகர்வு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.பணவீக்கம் நிலவியிருந்த போதிலும், மக்களின் வாங்கும் திறன் உயர்ந்திருப்பதும் மதுபானங்களுக்கு உள்ள தேவை அதிகரிக்க காரணமாகியுள்ளது.மேலும், கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்ட வரி உயர்வுகள் விற்பனை அளவைக் குறைத்திருந்த போதிலும், தற்போதைய நிலையில் கலால் வரி வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.