அண்மைக்காலமாக அதிகரித்துவரும் தன்னிச்சையான கைதுகள், முறையான பிடியாணைகள் இன்றி காவல்துறை சோதனைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் நீதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அவசியமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்து மக்களும் நீதியான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் சட்டம் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்துவரும் தன்னிச்சையான கைதுகள் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனம் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் தன்னிச்சையான கைதுகள், முறையான பிடியாணைகள் இன்றி காவல்துறை சோதனைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் நீதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.காவல்துறையினர் பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அவசியமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அனைத்து மக்களும் நீதியான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைய வேண்டும் என்றும் சட்டம் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.