யாழில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் விழிப்பு குழுக்களை அமைப்பது அவசியம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்நதா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், வாள்வெட்டு சம்பவங்கள், கால் நடை திருட்டு, சட்டவிரோத மணல் அகழ்வு,போதைப் பொருள் பாவனை ஆகியவை அதிகரித்துக் செல்கின்றன என்றும், அதனால் பொது மக்கள் மத்தியில் அச்சமான நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக வியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது நீண்டகாலப் பிரச்சினை, இதற்கு நடவடிக்கை எடுக்க விரும்புகின்றேன்.
அதாவது கால் நடை திருட்டு, சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் சம்மந்தமாக இந்த கூட்டத்தில் கலந்துரையாட இருந்தேன்.
ஆனால் நேரம் போதவில்லை. இக் கூட்டம் முடிந்த பின்னர் நான் கிராமங்கள் தோறும் சென்று கிராம மட்டங்களில் விழிப்பு குழுக்களை அமைத்து இவ்வாறான குற்றச்செயலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரலாம் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை.samugammedia யாழில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் விழிப்பு குழுக்களை அமைப்பது அவசியம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்நதா தெரிவித்துள்ளார்.பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், வாள்வெட்டு சம்பவங்கள், கால் நடை திருட்டு, சட்டவிரோத மணல் அகழ்வு,போதைப் பொருள் பாவனை ஆகியவை அதிகரித்துக் செல்கின்றன என்றும், அதனால் பொது மக்கள் மத்தியில் அச்சமான நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக வியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இது நீண்டகாலப் பிரச்சினை, இதற்கு நடவடிக்கை எடுக்க விரும்புகின்றேன். அதாவது கால் நடை திருட்டு, சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் சம்மந்தமாக இந்த கூட்டத்தில் கலந்துரையாட இருந்தேன். ஆனால் நேரம் போதவில்லை. இக் கூட்டம் முடிந்த பின்னர் நான் கிராமங்கள் தோறும் சென்று கிராம மட்டங்களில் விழிப்பு குழுக்களை அமைத்து இவ்வாறான குற்றச்செயலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரலாம் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.