கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று(04) கல்முனை வாசலில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பேரவை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம். எம்.அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.ஆசிக், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் மாநகர சபையின் பிரதி ஆணையாளருமான ஏ.எஸ்.எம்.அஸீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜெளஸி,கல்முனை சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் பிரமுகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.
மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபியின் நன்றியுரைடன் இறுதியாக கல்முனை சாஹிறா தேசியக்கல்லூரி, இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி உயர்தரப்பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
கல்முனை வாசலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு. கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று(04) கல்முனை வாசலில் நடைபெற்றது.கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பேரவை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.இதன்போது கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம். எம்.அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.ஆசிக், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் மாநகர சபையின் பிரதி ஆணையாளருமான ஏ.எஸ்.எம்.அஸீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜெளஸி,கல்முனை சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் பிரமுகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபியின் நன்றியுரைடன் இறுதியாக கல்முனை சாஹிறா தேசியக்கல்லூரி, இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி உயர்தரப்பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.