அண்டை நாடுகளின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் இந்தியா கட்டுப்படுத்த முயலவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் மாற்றங்கள் நாட்டின் குடிமக்களால் தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை அரசியலில் ஏற்படுவதை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற கேள்விக்ககு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நியுயோர்க் நகரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ். ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தெருப் போராட்டங்கள் மூலம் பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் மற்றும் தேர்தல் பாதை மூலம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஆகியவை டாக்கா மற்றும் கொழும்பின் டெல்லியுடனான உறவுகள் பற்றிய கேள்விகளை உருவாக்கியுள்ள நேரத்தில், தெற்காசியாவில் பொருளாதார பிராந்தியவாதத்தை கட்டியெழுப்புவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்பதையும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.
அண்டை நாடுகளின் அரசியல் நகர்வையும் இந்தியா கட்டுப்படுத்த முயலவில்லை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். அண்டை நாடுகளின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் இந்தியா கட்டுப்படுத்த முயலவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரசியல் மாற்றங்கள் நாட்டின் குடிமக்களால் தீர்மானிக்கப்படும் எனவும் இலங்கை அரசியலில் ஏற்படுவதை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இலங்கையின் அரசியல் மாற்றங்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற கேள்விக்ககு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நியுயோர்க் நகரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ். ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தெருப் போராட்டங்கள் மூலம் பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் மற்றும் தேர்தல் பாதை மூலம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஆகியவை டாக்கா மற்றும் கொழும்பின் டெல்லியுடனான உறவுகள் பற்றிய கேள்விகளை உருவாக்கியுள்ள நேரத்தில், தெற்காசியாவில் பொருளாதார பிராந்தியவாதத்தை கட்டியெழுப்புவதில் இந்தியா கவனம் செலுத்துகிறது என்பதையும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.