சீனாவானது அது உரிமை கோருகின்ற தென்சீனக் கடலிலேயே "ரஷ்யாவுடன்" இணைந்து நின்று பதிலடி தர இந்தியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து தென்சீனக்கடல் வழியே ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை இணைக்கும் கடல்வழி பாதையை தொடங்குவதில் மத்திய அரசு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளையும் இந்தியாவிடம் இருந்து பிரித்து இந்திய பெருங்கடலில் தமது கடல் வழி வர்த்தக பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் சீனாவின் இத்தகைய முயற்சிகளுக்கு பதிலடியாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி வர்த்தக பாதை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மையில் ரஷ்யா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி பாதையை உருவாக்குவது தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவுடன் இணைந்து சீனாவிற்கு பலத்த அடி கொடுக்க தயாராகும் இந்தியா.samugammedia சீனாவானது அது உரிமை கோருகின்ற தென்சீனக் கடலிலேயே "ரஷ்யாவுடன்" இணைந்து நின்று பதிலடி தர இந்தியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சென்னையில் இருந்து தென்சீனக்கடல் வழியே ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை இணைக்கும் கடல்வழி பாதையை தொடங்குவதில் மத்திய அரசு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தியாவின் அண்டை நாடுகளையும் இந்தியாவிடம் இருந்து பிரித்து இந்திய பெருங்கடலில் தமது கடல் வழி வர்த்தக பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் சீனாவின் இத்தகைய முயற்சிகளுக்கு பதிலடியாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி வர்த்தக பாதை ஆரம்பிக்கப்படவுள்ளது.அண்மையில் ரஷ்யா சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கான கடல் வழி பாதையை உருவாக்குவது தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.